கண்டாச்சிபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

71பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படை போலிசார் கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனை சாவடி பகுதியில் இரகசிய ரோந்து பணியில் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து மழந்தாங்கல் நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 5 மூட்டைகளில் சுமார் 70 கிலோ எடைக் கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கார் மற்றும் குட்கா பொருட்கள் மற்றும் காரை ஓட்டிவந்த நபரை கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் காத்தமுத்து விசாரணை நடத்தியதில், மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுபாஷ்(32), என்பதும் கடைகளுக்கு விற்பனை செய்ய குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் காத்தமுத்து குட்தா கடத்திய கார் மற்றும் 5 மூட்டைகளில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான 70கிலோ குட்காவை பறிமுதல் செய்து சுபாஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி