விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் விழுப்புரம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குட்கா குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்டாச்சிபுரம் பகுதியில் தனிப்படை பொலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் மேலும் அவரது வாகனத்தின் பின்புறம் பெரிய ஆட்டை பெட்டி ஒன்று இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த கண்டாச்சிபுரம் போலீசார் உடனடியாக அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் கடையம் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் மகன் சந்தோஷ்குமார்(20), என்பதும், அவரது வாகனத்தில் இருந்த பெட்டியில் குட்கா மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பெட்டியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 22 கிலோ குட்கா இருந்துள்ளது.
பின்னர் சம்பவம் இதுகுறித்து வழக்கு பதிந்து 22 கிலோ குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சந்தோஷ்குமாரை அதிரடியாக போலிசார் கைது செய்தனர்.