இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

70பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோவிலூர் லஷ்மி ஸ்டோர் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண்சிகிச்சை முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் வாசன் தலைமையில், சங்கச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 50க்கும் மேற்பட்டோர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் லஷ்மிஸ்டோர் உரிமையாளர் கார்த்திக் ராம், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்து குமாரசாமி, சௌந்தர், R. C. C. குழும செயலாளர் தேவி பாலமுருகன் , RCC உறுப்பினர் குழுவினர், கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் , செவிலியர் மற்றும் ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி