இலவச கண் பரிசோதனை முகாம்

85பார்த்தது
இலவச கண் பரிசோதனை முகாம்
திருக்கோவிலூர் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருக்கோவிலூர் அரிமா சங்கம், கலை அறிவியல் கல்லூரி இணைந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

அரிமா சங்க ஆலோசகர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்டம் முதலாம் துணை நிலை ஆளுநர் ராஜா சுப்பிரமணியம், மாவட்ட தலைவர்கள் உலகளந்தான், சத்திய நாராயணன், பால்ஆரோக்கியராஜ், ராமகிருஷ்ண ரமணன், திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி தலைவர் செல்வராஜ், பொருளாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

அரவிந்த் கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 210 நபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 40 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருக்கோவிலூர் கல்லூரி முதல்வர் நாராயணசாமி, அரிமா சங்க தலைவர் வில்வபதி, செயலாளர் உஷாராணி, பொருளாளர் ராஜேஸ்வரி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி