விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே கரடிப்பாக்கம் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்தனர். விழாவினை காண சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.