விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூரில் இருந்து புத்தூர், ஆற்காடு வழியாக ஆயந்துார் வரை செல்லும் சாலை பல கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இடம் குறைவான பகுதியில் சிறிதளவு அகலப்படுத்தி சாலை போடப்பட்டுள்ளதால் சாலைகள் விரிசலடைந்துள்ளது. இதனை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.