விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள மனம்பூண்டி கிராமத்தில், பாஜக சார்பில் மும்மொழி கொள்கை ஆதரித்து நேற்று (மார்ச் 13) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பாஜக விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், கிளை நிர்வாகி மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.