விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டம்பட்டு ஊராட்சியில், பாஜக சார்பில் மோடி அரசின் பத்தாண்டு கால சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கினார். உடன் முகையூர் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.