அரகண்டநல்லுார் பேரூராட்சி, உலக மகளிர் தின விழாவில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு போட்டிகள் நடந்தன. முன்னாள் கவுன்சிலர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் மாலதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜனசக்தி, பச்சையம்மாள், செல்வி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் அன்பு பரிசுகளை வழங்கினார். கவுன்சிலர் குமார், வேம்பு, ஜெரினா பேகம் கலந்து கொண்டனர். மகாலட்சுமி நன்றி கூறினார்.