விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பகுதியில், நேற்று (ஜூலை 26) தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னணியில், பாஜக மாவட்ட விவசாயி அமைப்பாளர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.