கண்டாச்சிபுரம் தாலுகா கொடுங்கால்கிராமத்தை
சேர்ந்தவர் சுப்பராயன் மகன் சிவகுமார்(வயது32).
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சமையல்
வேலை செய்து வந்த இவர் சம்பவத்தன்று இரவு சென்னையில் இருந்து
மோட்டார் சைக்கிளில் கொடுங்கால் கிராமத்துக்கு வந்துகொண்டிருந்தார். திண்டிவனத்தை அடுத்த சாரம் அருகே வந்தபோது பின்னால் வந்த
அடையாளம் தெரியாத வாகனம் சிவகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில்
படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார்
பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.