அரகண்டநல்லூர் கோவிலில் கொடிமரம் அமைக்கப்பட்டது

53பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் , அரகண்டநல்லூர் சிவன் ஆலயத்தில் இன்று (ஜூலை 31) கொடிமரம் புதிதாக அமைக்கப்பட்டது. அரகண்டநல்லூரில் அமர்ந்திருக்கும் சிவன் ஆலயத்தில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதியதாக கொடிமரம் அமைக்கும் பணி இன்று காலை நடைபெற்றது. கிரேன் உதவியுடன் பக்தர்களால் சிவாச்சாரியர்கள் பூஜையுடன் கொடிமரம் நடப்பட்டது.

தொடர்புடைய செய்தி