10ம் தேதி திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

53பார்த்தது
10ம் தேதி திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
திருக்கோவிலூர் அருகே உள்ள பாவந்தூர் மதுரா மேட்டுக்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கங்கையம்மன், அய்யப்பன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்தகோவில் கும்பாபிஷேக விழா வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. 10 மணிக்கு மேல் அஷ்டபந்தனம் சாற்றுதல் மற்றும் ரத்ன பிரதிஷ்டை - ஆகிய நிகழ்ச்சிகளும், மாலையில் அங்கு - ரார்ப்பணம், மகாசாந்திஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், இரவு மகா சாந்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பின்னர் 10-ந் - தேதி(திங்கட்கிழமை)காலை6. 30 மணிக்கு மேல் 7. 30மணிக்குள் புனிதநீர் ஊற்றப்பட்டு கோவில் கோபுரங்களுக்கும், சாமிகளுக்கும் - கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி