திண்டிவனம் - Tindivanam

மரக்காணத்தில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட இடம்.. எம்எல்ஏ கோரிக்கை

மரக்காணத்தில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட இடம்.. எம்எல்ஏ கோரிக்கை

மரக்காணம், திரவுபதி அம்மன் கோவில் எதிரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், சாலை ஓரத்தில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக டெண்ட் அமைத்து வசித்து வருகின்றனர். இது குறித்து நரிக்குறவர்கள் திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனனிடம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் எம்.எல்.ஏ., அர்ஜூனன் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பக்கிங்காம் கால்வாய் அருகில் நரிக்குறவர் குடும்பத்திற்கும் வீடு கட்ட 1.5 சென்ட் நிலம் வழங்குவதற்கு ஆவணங்களை வருவாய்த்துறையினர் தயார் செய்து வைத்துள்ளனர்.  இது குறித்து மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியை எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேரில் சந்தித்து 1.5 சென்ட் நிலம் வீடுகட்ட மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நரிக்குறவர்களின் நலன் கருதி ஒவ்வொரு நரிக்குறவர் குடும்பத்திற்கும் குறைந்தது 2.5 சென்ட் நிலம் பட்டா வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளதாகவும், ஆவணங்களை தயார் செய்யவும் கேட்டுக்கொண்டார். மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி கூடுதல் நிலம் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా