விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நொளம்பூர் கிராமம் இந்திரா நகர் பகுதியில் ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தரா சன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் விற்பனைக்காக சாரா யம் வைத்திருந்த பாண்டுரங்கன் மனைவி ராஜகுமாரி(வயது 48) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.