ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 800, 400, 200, 100 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடந்த போட்டியில் தீபிகா, ஜனனி, லீலாவதி, கபிலேஷ், பிரியதர்ஷினி, ராகுல் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இந்த மாணவர்கள் பள்ளி, ஒன்றியம், மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்ததுடன், மாநில அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு மாநில அளவில் வெற்றி பெற்றதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்கள் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது. சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா, துணை முதல்வர் மாசிலாமணி, உடற்கல்வி ஆசிரியர் கரன்ராஜ் பாராட்டினர். இதே போன்று, பள்ளி மாணவர் லோகேஷ்வர், மாணவி புவனேஸ்வரி. இருவரும் ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.