விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனியர் மருத்துவர்களே பணியில் இருப்பதில்லை என அதிமுக மாணவரணி தலைவர் சிங்கை ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், போதிய மருத்துவர்கள் இல்லாமல் அவசர சிகிச்சைகளை அளிக்க முடியாமல் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை. இரத்தக்கறையுடன் பயன்படுத்திய கையுறைகளை அலசி மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. ஊசிகளும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் பல நோய்கள் பரவும் தீவிர அபாயம் நிலவுகிறது.
படுக்கைகள், விரிப்புகள் மாற்றப்படுவதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் மாரத்தான் ஓடிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எப்போது அரசு மருத்துவமனைகளை ஒழுங்காக கவனிக்கப் போகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.