நீதிமன்றத்தில் ஒரே நாளில் ₹. 1, 79, 71, 616 ரூபாய்க்கு தீர்வு

63பார்த்தது
நீதிமன்றத்தில் ஒரே நாளில் ₹. 1, 79, 71, 616 ரூபாய்க்கு தீர்வு
திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று காலை லோக் அதாலத் நடந்தது. முதன்மை சார்பு நீதிபதி், வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் செல்வி தனம் வரவேற்றார். கூடுதல் மாவட்ட நீதிபதி (1) மொகமத் பாரூக் தலைமை தாங்கி பேசினார். திண்டிவனம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சண்முகம், அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் பூபாலன், வழக்கறிஞர் நலச்சங்க செயலாளர் கிருபாகரன், மகளிர் வழக்கறிஞர் தலைவர் கலா, மாஜிஸ்திரேட்டுகள் கமலா, மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் பாதுக்காக்கும் பொருட்டு பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று வழங்கபட்டது. நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் கோதண்டம், அருணகிரி, நாகையா, பாலச்சந்திரன், பாலசுப்ரமணி, அஜ்மல் அலி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். லோக் அதாலத்தில் சிவில் , கிரிமினல் , மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது, ஒரு கோடியே 79 லட்சத்து 71 ஆயிரத்து 616 மதிப்பில் 800 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, முடித்து வைக்கப்பட்டது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி