திண்டிவனத்தில் பாமகவினர் கைது போலீசார் குவிப்பு.

4114பார்த்தது
திண்டிவனத்தில் பாமகவினர் கைது போலீசார் குவிப்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர பாமக சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மானூர் கிராமத்தில் இருந்து திண்டிவனம் நகரம் நோக்கி இரு சக்கர வாகன பேரணி நடத்துவதற்கு நேற்று காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டு இன்று காலை இருசக்கர வாகன பேரணி மானூர் கிராமத்திலிருந்து திண்டிவனம் நகர் நோக்கி புறப்பட்டது.

அப்போது மன்னார் சாமி கோவில் அருகே இரு சக்கர வாகன பேரணி வந்தபோது திண்டிவனம் நகர போலீசார் திடீரென இருசக்கர வாகன பேரணியை தடுத்து நிறுத்தி இருசக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்து பாமகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் பாமகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் இதன் காரணமாக பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி