திண்டிவனத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய போலீசார்?

570பார்த்தது
திண்டிவனத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய போலீசார்?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல்சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 20).

இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, ஒலக்கூர் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3-ந்தேதி இரவு சுமார் 1 மணி அளவில் தனது நண்பர்கள் 3 பேருடன் டீக்குடிக்க அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திண்டிவனம் ரோந்து போலீசார் அபினேஷ் உள்பட 4 பேரையும் தாக்கியுள்ளனர். எனவே, அபினேஷ் உள்பட 4 பேரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி