விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முருக்கேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார், அப்போது ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 95 வயது முதியவரான நடேசன் மற்றும் அவரது மனைவி ராஜாதி ஆகியோர் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டுமென மனு அளித்தனர், அந்த மனுவை பெற்றுக் கொண்ட மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்து நடவடிக்கை மேற்கொண்டு உதவித்தொகை வழங்க வழிவகை செய்யுமாறு உத்தரவிட்டார்.