திண்டிவனம் அருகே விபத்தில் ஒருவர் இறப்பு

51பார்த்தது
திண்டிவனம் அருகே விபத்தில் ஒருவர் இறப்பு
மதுரை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 50; இவர், மரக்காணம் ரோட்டில் தங்கி திண்டிவனம் அடுத்த சிப்காட் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து திரும்பினார். 9: 15 மணிக்கு திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராம கூட்ரோட்டில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைப்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த சேகர் திண்டிவனம் அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி