விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரிபாளையம் கிராம நாட்டாமைகார தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் கூலித் தொழிலாளி இவரது மகன் சேதுராமன் வயது (25) இவர் டைல்ஸ்
வேலை செய்யும் தொழில் செய்து வந்தார், இந்நிலையில் இவரும் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் வயசு (26) ஆகிய இருவரும் வழக்கம்போல் தங்களது வேலைகளை செய்ய புதுவைக்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர் இவர்கள் புதுவையில் இருந்து தங்களது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அதே மோட்டார் பைக்கில் ஈ. சி. ஆர் சாலை வழியாக மரக்காணம் திரும்பி உள்ளனர் ஆனால் இவர்கள் வந்த மோட்டார் பைக்கை யார் ஓட்டியது என தெரியவில்லை இந்நிலையில் மரக்காணம் அருகே செட்டி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் லாரி பஞ்சர் ஆகி நின்று உள்ளது, பஞ்சராகி நின்ற லாரியின் பின்புறம் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததால் லாரி நின்று இருந்ததை சற்றும் எதிர்பாராத வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்டுள்ளனர், இதில் சேதுநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார் சுதாகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி உள்ளார், மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடிய சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.