விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஊராட்சியில் குளம் சீரமைப்பு பணி இன்று (ஜூலை 31) நடைபெற்றது. சிங்கனூர் ஊராட்சியில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் குளம் சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக உள்பட்ட தடுப்புக்கட்டை மற்றும் படி அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலத்திற்கு முன்னதாகவே இப்பணிகளை முடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.