விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார் இதில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன் உள்ளிட்ட பாமகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், இந்த பொதுக்குழு கூட்டத்தில் திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும், திண்டிவனம் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.