விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தனியார் மண்டபத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து, திமுக இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு இன்று (ஜனவரி 4) தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட அவை தலைவர், மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.