விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சலவாதி ஊராட்சியில், இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பழங்குடியினர் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி, அவர்கள் இன்று தொடங்கி வைத்து அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் சிவா, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட ஆசிரியர் தமிழழகன் உட்பட பலர் உள்ளனர்.