ஓமந்தூர் பள்ளியில் சி. ஆர். பி. எப் பெண் வீரர்களுக்கு வரவேற்பு

50பார்த்தது
ஓமந்தூர் பள்ளியில் சி. ஆர். பி. எப் பெண் வீரர்களுக்கு வரவேற்பு
பெண்களை பாதுகாப்போம், பெண்களைப் படிக்க வைப்போம் என்பதை வலியுறுத்தி சி. ஆர். பி. எப் பெண் வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து 15 மாநிலங்களையும்,
2 யூனியன் பிரதேசங்களையும் கடந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருசக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மூன்று குழுக்களும் வரும் 31ஆம் தேதி குஜராத் சென்று ஸ்ரீநகரை அடைகின்றனர். டெபுட்டி காமாண்டோ சிந்து தலைமையில் 30 பைக்குகளில் 60 பெண் வீரர்கள் கடந்த 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் பைக் விழிப்புணர்வு பேரணியை துவக்கினர். புதுச்சேரி வழியாக வந்த பைக் பேரணிக்கு ஓமந்தூரில் உள்ள ஸ்ரீராம் தனியார் பள்ளியின் நிறுவனர் முரளி என்பவரின் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தேசப்பற்றை உணர்த்து வகையில் மாணவர்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் சி. ஆர். பி. எஃப் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஹிந்தி மொழியில் பாட்டுப்பாடியும் உற்சாகப்படுத்தினார், இதனை பார்த்த சி. ஆர். பி. எஃப் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி