திண்டிவனத்தில் அதிமுக நிர்வாகி தீவிர வாக்கு சேகரிப்பு.

57பார்த்தது
திண்டிவனத்தில் அதிமுக நிர்வாகி தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் இன்று முதல் அரசியல் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவடைய உள்ளது இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளனர், அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திண்டிவனம் நகரத்துக்கு உட்பட்ட முருங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், வாக்கு சேகரிப்பின் போது திமுகவின் பொய் பிரச்சாரங்களை நம்பி மக்கள் நீங்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அதிமுக செய்த நலத்திட்டங்கள் மற்றும் திமுக செய்யத்தவறிய நலத்திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தினர் மேலும் சென்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக செங்கல் கையில் எடுத்து பிரச்சாரம் செய்தனர் மீண்டும் அதே செங்கலை கையில் எடுத்துள்ளார், பாஜக அரசும் விலைவாசியை ஏற்றி மக்களை வாட்டி வதைக்கிறது எனவே பொதுமக்களாகிய நீங்கள் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் உங்களது வாக்குகளை அதிமுகவிற்கு செலுத்துங்கள் என கூறி வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் நடுவே முதியவர் ஒருவர் மேல தல இசை கேட்ப நடனமாடி மகிழ்ந்தார்.

தொடர்புடைய செய்தி