வானூர் பகுதியில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

57பார்த்தது
வானூர் பகுதியில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்திலுள்ள கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது: கோடைகாலங்களில் ஆழ்துளைக்கிணறு அல்லது கிணற்றுப் பாசனம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் நிலங்களைத் தரிசாக விடாமல் சாகுபடி செய்ய ஏதுவாக, கோடைகாலப் பயிா் சாகுபடி சிறப்புத் திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உளுந்து, மணிலா, எள் போன்ற பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகளை வேளாண் துறை ஊக்கப்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், வானூா் வட்டாரத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கோடைப்பயிா் சாகுபடி சிறப்புத் திட்டத்தின் கீழ் பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக, கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் சுமாா் 32 ஏக்கா் பரப்பளவில் விவசாயி பங்காரு ரெட்டியாா் உளுந்து வம்பன்-10 ரகத்தை கடந்த சித்திரை மாதத்தில் விதைப்பு செய்தாா். தற்போது உளுந்து பூக்கும் தருவாயில் உள்ளது. பயிா் வளா்ச்சி ஊக்கி , பூச்சி மற்றும் பூஞ்சான மருந்துகளைத் தெளித்திட விவசாயிக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றாா். இந்த ஆய்வின்போது துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள், தங்கம், ஆத்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி