கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது.

181பார்த்தது
கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தன். அவரது மகன் அபிஷேக் (வயது 23). சென் னையில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கைப்பாணி என்றஇடத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மோகன் (27) உள்பட 8 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த சென்னை கோவூர் வெங் கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), சென்னை அலங்கார் நகரை சேர்ந்த ஹரிகரசுதன் (29) ஆகி யோரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் போரூர் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி