விழுப்புரம் மாவட்டம் முழுவதும், புத்தாண்டை ஓட்டி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று (ஜனவரி 1) காலை 6 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. இந்த சோதனையின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குதல் மற்றும் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தவர்கள் என 102 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 80 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.