திரவுபதி அம்மனுக்கு கிராம மக்கள் வரவேற்பு

84பார்த்தது
திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை கிராமத்திற்கு வந்த திரவுபதி அம்மனுக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

திண்டிவனம், செஞ்சி ரோட்டிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலின் அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, கடந்த மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து 5ம் நாள் உற்வசமான நேற்று ஜக்காம்பேட்டை கிராம மக்கள் சார்பாக நடந்த நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் கோவிலிருந்து புறப்பட்டு, ஜக்காம்பேட்டை கிராமத்திலுள்ள வீதிகளில் வீதியுலா நடந்தது.

ஜக்காம்பேட்டைக்கு வந்திருந்த சுவாமி வீதியுலா நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், கிராம முக்கியஸ்தர்கள் வாசுதேவன், சுந்தர், பாலா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி