மயிலம், பெரும்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் 70 கிலோ அளவிற்கு சாக்கு பையில் குட்கா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்குமார், 34; என தெரியவந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.