விழுப்புரம்: பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

81பார்த்தது
விழுப்புரம்: பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டு கரையோரப் பகுதியில் பனை விதைகளை நடும் பணிகளை வனத்துறை அமைச்சர் க. பொன்முடி இன்று(அக் 14) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சி பழனி, மண்டல வன அதிகாரி பெரியசாமி, மாவட்டச் செயலாளர் பொன். கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்னியூர் அ. சிவா, டாக்டர் இரா. இலட்சுமண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி