திண்டிவனம் தீயணைப்பு நிலையம் கடந்த 1968ம் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தை ஒட்டியபடி செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து தீயணைப்பு நிலையத்திற்குள் புகுந்தது. பழைய கட்டிடம் என்பதால் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக மழை நீரும் கழிவு நீரும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கியது. இங்கு பணியில் 23 தீயணைப்பு வீரர்கள் உள்ள நிலையில் அவர்கள் இயற்கை உபாதைகளுக்காக வளாகத்தின் பின்புறமுள்ள கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவறையை மழைநீர் சூழ்ந்து காணப்படுவது அதற்கு காரணம் என புறப்படுகிறது. கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளிக்கும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல் பொருள் வைக்கும் அறை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் பாதுகாப்பு உபகரணங்கள் நீரில் சேதம் அடையும் அவலங்களையும் உள்ளது.
இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் தீயணைப்புத்துறையினர்கள் தங்கள் தீயணைப்பு நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அவல நிலை உள்ளது.