திறனறி தேர்வு: 4, 520 மாணவர்கள் பங்கேற்பு

153பார்த்தது
திறனறி தேர்வு: 4, 520 மாணவர்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திறனறி தேர்வில் 4, 520 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகம் முழுதும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் திறனறி தேர்வு பள்ளிக்கல்வி துறை மூலம் நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், பிரம்மதேசம், அவலுார்பேட்டை, மயிலம், மேல்மலையனுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம், கண்டமங்கலம், கிளியனுார், திருச்சிற்றம்பலம், கோலியனுார், தும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட 21 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுத 1, 584 மாணவர்கள் 3, 117 மாணவிகள் உட்பட 4, 701 பேர் விண்ணப்பித்தனர். அதில் 1, 487 மாணவர்கள், 3, 033 மாணவிகள் என 4, 520 பேர் தேர்வுஎழுதினர். 97 மாணவர்கள், 84 மாணவிகள் என 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய மையங்களில் நடந்த தேர்வை கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி