இந்து முன்னணி தலைவர் மீது தாக்க முயன்ற எஸ். ஐ. , மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் நிர்வாகிகள் வாயில் துணி கட்டி கொண்டு மனு அளித்தனர். இந்து முன்னணி பேரியக்கம் கோட்ட தலைவர் சிவா தலைமையில் நிர்வாகிகள், இன்ஸ்பெக்டரிடம் அளித்த மனுவில், இந்து முன்னணி பேரியக்க மாவட்ட தலைவர் சதீைஷ, மேற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தாக்க முயன்றுள்ளார்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் நாளை 8ம் தேதி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட தலைவர் சதீஷ், செயலாளர்கள் அருண் தனபால், செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.