விழுப்புரம் மேற்கு போலீசார், நேற்று விழுப்புரம் மேல் தெரு பிள்ளையார்கோயில் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, 720 கிராம் குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த சேதுபதி, 32; என்பதும், அவர் விற்பனைக்காக குட்கா கொண்டு சென்றதும் தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.