விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வல்லம் கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம், பாமக மாவட்ட செயலாளரும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ர. புகழேந்தி வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் மு. ஜெயராமன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வல்லம் கிழக்கு ஒன்றிய செயலாளர் N. சக்கரவர்த்தி நன்றி உரையாற்றினார்.