கால்நடை மருத்துவமனை ரெட்டணையில் திறப்பு

68பார்த்தது
கால்நடை மருத்துவமனை ரெட்டணையில் திறப்பு
மயிலம் அருகே உள்ள ரெட்டணை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. ரெட்டணையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார். மயிலம் தொகுதிஎம். எல். ஏ. , சிவக்குமார், முன்னாள் எம். எல். ஏ. , க் கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் ராஜேந்திரன் பேசினர். கூட்டத்தில், கால்நடை உதவி மருத்துவர்கள் ராஜ்குமார், மணிமாறன், நிவேதா, ஆய்வாளர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ரவி, கவுன்சிலர் கிஷோர், பா. ம. க. , ஒன்றிய செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் கோரிக்கைநிகழ்ச்சியின் போது, பொதுமக்கள் அமைச்சரிடம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டணை ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த 2019-20ம் ஆண்டில் 14 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் அமைக்கப்பட்டு, இதுவரை செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இது குறித்து ரெட்டணை கிராம மக்கள் அமைச்சர் மஸ்தானிடம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களை அழைத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி