விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குறைபாடு குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
வளமைய மேற்பார்வையாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். இதில் வல்லம் வட்டாரத்தில் 1 முதல் 12 வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவிகளுக்கு செவித் திறன் குறைபாடு, அறிவு திறன் குறைபாடு, கண் பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி மற்றும் முடக்குவாத குறைபாடு, பேச்சுத்திறன் குறைபாடு ஆகிய அனைத்திற்கும் பரிசோதனை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ஜோலாதாஸ், சுரேஷ் மற்றும் வளமைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.