கொந்தமூரில் மருத்துவ முகாம்

64பார்த்தது
கொந்தமூரில் மருத்துவ முகாம்
கொந்தமூர் கிராமத்தில் கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. கொந்தமூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில், டாக்டர்கள் குரு, ஷர்மிஸ்ரீ, சந்திரசேகர் ஆகியோர் சிகிச்சையளித்தனர். நர்சிங் கல்லுாரி பேராசிரியர்கள் வினிதா, சுசித்ரா, செவிலியர்கள் இந்துமதி, விவிஜா மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி