மயிலம் முருகர் கோவில் வைகாசி கிருத்திகை விழா

57பார்த்தது
திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு உற்சவர் வெள்ளி மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் மலைமேல் அமைந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக பொடி, பஞ்சாமிர்தம், பால், சந்தனம், தேன், திருநீரு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதேபோல் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், பழங்கள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

மூலவர் தங்க கவசத்திலும்,
இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உற்சவ மூர்த்திக்கு பல்வேறு விதமான தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் மலை வலம் வரும் காட்சி நடைபெற்றது.

கிருத்திகை விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி