திண்டிவனம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சி

52பார்த்தது
திண்டிவனம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சி
திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை சார்பு நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான செல்வி தனம் வரவேற்றார். கூடுதல் மாவட்ட நீதிபதி(1) மொகமத் பாரூக் தலைமை தாங்கி பேசினார்.

திண்டிவனம் வழக்கறிஞர் சங்க தலைவர் சண்முகம், அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் பூபாலன், வழக்கறிஞர் நல சங்க செயலாளர் கிருபாகரன், மகளிர் வழக்கறிஞர் தலைவர் கலா, முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் கமலா, இரண்டாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் சுற்று சூழல் பாதுக்காக்கும் பொருட்டு பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கபட்டது.

நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் கோதண்டம், அருணகிரி, நாகையா, பாலசந்திரன், பாலசுப்ரமணி, அஜ்மல் அலி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

லோக் அதாலத்தில் சிவில், கிரிமினல், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது, ரூ. ஒரு கோடியே 79 லட்சத்து 71 ஆயிரத்து 616 மதிப்பில் 800 வழக்களுக்கு தீர்வு காணப்பட்டு, முடித்து வைக்கப்பட்டது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி