கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி

66பார்த்தது
கோவிலுக்கு வந்த வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கள்ளாளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உத்திரக்குடி மகன் முனியப்பன், 21; இவர், மேல்மருவத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது தாய் குணசுந்தரியுடன், நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி, விழுப்புரம், காகுப்பம் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்றார். இருவரும் இரவு அங்கேயே தங்கிய நிலையில், நேற்று காலை முனியப்பனை காணாமல் குணசுந்தரி தேடியுள்ளார். காலை 6: 30 மணிக்கு கோவில் அருகே ரயில் பாதையை முனியப்பன் கடக்க முயன்றபோது, விழுப்புரத்தில் இருந்து சென்ற நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை துண்டித்த நிலையில் இறந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி