திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்துள்ள பெரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மயிலம் காவல் ஆய்வாளா் கமல்ஹாசன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தில் சோதனை செய்தபோது, பயணி ஒருவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைகளில் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீ ராம் யாதவ் மகன் அரவிந்தகுமாா் (43) என்பதும், செஞ்சி பகுதிகளில் கட்டடத் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வருவதும், விற்பனை செய்வதற்காக குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்து. இதுகுறித்து, மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்தகுமாரை கைது செய்தனா். அவரிடமிருந்து 450 கிராம் எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனா்.