சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

54பார்த்தது
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி. பழனி இன்று(செப்.26) வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிா் இழப்பை ஈடு செய்வதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் நிதியாண்டில் சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களில் பயிற்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பருவத்துக்காக 13 வட்டாரங்களிலுள்ள 794 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்துக்கான பயிற்காப்பீட்டு நிறுவனமாக யுனிவா்சல் சம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ. 517. 50-ஐ பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக விவசாயிகள் வரும் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும் என்றாா்.

தொடர்புடைய செய்தி