திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி. மு. க. , இளைஞரணி சார்பில் மண்டல அளவிலான பேச்சுப் போட்டி நடந்தது. போட்டியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்து பேசினார். நடுவர்களாக பேராசிரியர் சுப வீரபாண்டியன், ஷபி சுலைமான், தமிழ் காமராசன் இருந்தனர். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மஸ்தான், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ். முன்னாள் எம். எல். ஏ. , க்கள் மாசிலாமணி, சீத்தபாதி சொக்கலிங்கம், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, உதயகுமார், விஜயகுமார், அண்ணாமலை, ஆவின் சேர்மன் தினகர். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், முன்னாள் செயலாளர் கபிலன், நகர மன்ற தலைவர் நிர்மலா, கவுன்சிலர் ரேகா, செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன். ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, மணிமாறன், விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், ஆடிட்டர் பிரகாஷ், கவுன்சிலர் ரேணுகா, வழக்கறிஞர்கள் அசோகன், கோபிநாத், நகர பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.