நாய்கள் துரத்தி கடித்த மான் வனத்துறையில் ஒப்படைப்பு

62பார்த்தது
திண்டிவனம் அருகே நாய்கள் துரத்தி கடித்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்மாவிலங்கை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வழி தெரியாமல் தப்பி வந்த மானை அங்குள்ள நாய்கள் துரத்திக் கடித்தன. நாய்களிடமிருந்து அந்த மானை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டு திண்டிவனம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாய்கள் கடித்ததால் காயம் அடைந்த மானுக்கு வனத்துறையினர் மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த மான் வனப் பகுதியில் விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி